< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கையில் குழந்தையோடு ராஷிகன்னா.. வைரலாகும் புகைப்படம்
|30 Jun 2024 1:59 PM IST
கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை ராஷிகன்னா வெளியிட்டு இருக்கிறார்
சென்னை,
தமிழில் 'இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். இவர் சமீபத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார். தற்போது கைவசம் இரண்டு இந்தி படங்களை வைத்து இருக்கிறார்.
இந்நிலையில், கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களை ராஷிகன்னா வெளியிட்டு இருக்கிறார். அதனுடன் பகிர்ந்த பதிவில், "என் மருமகளால் எங்கள் குடும்பம் இன்னும் அழகாகி இருக்கிறது. இளவரசி வந்திருக்கிறாள்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.