'தி சபர்மதி ரிப்போர்ட்': பல்வேறு தலைவர்கள் பாராட்டு - நடிகை ராசிகன்னா நெகிழ்ச்சி
|ராசி கன்னா இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மும்பை,
கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி சபர்மதி ரிப்போர்ட்'. இந்தப் படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் 12-த் பெயில் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, நடிகை ராசி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சமீபத்தில் இப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பாராட்டியிருந்தார்கள். இந்நிலையில், நடிகை ராசிகன்னா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,
'மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையில் இதுபோன்ற ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களின் பாராட்டு நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிக்கிறது' என்றார். ராசி கன்னா இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.