விமர்சனத்திற்குள்ளான ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதியின் புதிய பங்களா
|ரூ. 250 கோடி மதிப்பில் மும்பையின் விலையுயர்ந்த பங்களாவை ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி கட்டி முடித்துள்ளனர்.
மும்பை,
இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இவர் கடந்த 2022ம் ஆண்டு நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனையடுத்து, ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி தங்களது மகள் ராகாவுக்காக ரூ. 250 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை மும்பையில் கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இந்த பங்களா கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கிருஷ்ணராஜ் கபூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஷாருக்கானின் மன்னட் பங்களாவையும், அமிதாப்பச்சனின் ஜல்சா பங்களாவையும் முந்தி மும்பையின் விலையுயர்ந்த பங்களாவாக இது மாறி உள்ளது.
இதனையடுத்து இந்த பங்களாவின் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர தொடங்கின. இதனை கண்ட ரசிகர்கள் சிலர் விமர்சித்தும், பாராட்டியும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். அதன்படி பயனர் ஒருவர், 'இது பங்களா அல்ல' என்றும் மற்றொருவர், அலுவலகம் போல் இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். வேறுசிலர், ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.