< Back
சினிமா செய்திகள்
வயநாடு நிலச்சரிவு: நடிகர் ஜெயராம் ரூ.5 லட்சம் நிதியுதவி
சினிமா செய்திகள்

வயநாடு நிலச்சரிவு: நடிகர் ஜெயராம் ரூ.5 லட்சம் நிதியுதவி

தினத்தந்தி
|
5 Aug 2024 9:44 PM IST

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ கேரள முதல்-மந்திரி பொது நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உதவ கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் விக்ரம் ரூ,20 லட்சமும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ,50 லட்சமும் நிவாரண நிதி வழங்கி உள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து ரூ,35 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ,10 லட்சமும் மலையாள நடிகர் பகத் பாசில் அவரது மனைவியும், நடிகையுமான நஸ்ரியா ஆகியோர் இணைந்து ரூ,25 லட்சம் வழங்கி உள்ளனர். நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் ரூ.1 கோடி வழங்கி உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் நிவாரண நிதியை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கேரள முதல்-மந்திரி பொது நிவாரண நிதிக்கு, நடிகர் ஜெயராம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

மேலும் செய்திகள்