< Back
சினிமா செய்திகள்
Ramayana: I will start shooting for Part 2 soon - Ranbir Kapoor
சினிமா செய்திகள்

'ராமாயணம்': 'விரைவில் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளேன்' - ரன்பீர் கபூர்

தினத்தந்தி
|
9 Dec 2024 12:54 PM IST

'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.

சென்னை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகி வரும் படம் 'ராமாயணம்'. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக கன்னட நடிகர் யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரன்பீர் கபூர், இப்படத்தில் நடிப்பது தனது கனவு என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

''ராமாயணம்' படத்தில் நடிப்பது என் கனவு. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளேன். ராமராக நடிப்பதில் மிகவும் பெருமையாக உள்ளது' என்றார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும்நிலையில், முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளியன்றும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியன்றும் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்