< Back
சினிமா செய்திகள்
சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படத்தின் ரிலீஸ் தேதி  அறிவிப்பு
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனியின் 'ராமம் ராகவம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Jan 2025 3:30 PM IST

அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள 'ராமம் ராகவம்' பட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்றது.சமூகத்துக்குத் தேவையான கதையை கொண்ட படமாக இது உருவாகி இருக்கிறது. கலகலப்பான குடும்ப படமான இந்தப் படத்தின் 'கொலசாமி போல' பாடல் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 'ராமம் ராகவம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது.

மேலும் செய்திகள்