சினிமா செய்திகள்
Ram Charan’s film earns Rs 186 crore on day 1
சினிமா செய்திகள்

'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் நாள் வசூல் - படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
11 Jan 2025 1:01 PM IST

'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை படக்குழு அறிவித்திருக்கிறது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை படக்குழு அறிவித்திருக்கிறது.

அதன்படி, கேம் சேஞ்சர் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 186 கோடி வசூலித்திருக்கிறது. தெலுங்கில் ரூ. 42 கோடி, தமிழில் ரூ 2.1 கோடி, இந்தியில் ரூ. 7 கோடி, கன்னடத்தில் 10 லட்சம் மற்றும் மலையாளத்தில் 3 லட்சமும் வசூலித்துள்ளது.

மேலும் செய்திகள்