< Back
சினிமா செய்திகள்
Ram Charan predicted the release of SSMP29... Rajamouli gave a reaction
சினிமா செய்திகள்

எஸ்.எஸ்.எம்.பி29 படத்தின் ரிலீஸை கணித்த ராம் சரண்...ராஜமவுலி கொடுத்த ரியாக்சன்

தினத்தந்தி
|
5 Jan 2025 6:30 AM IST

ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை இயக்கவுள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படும்நிலையில், இதன் முதல் பாகம் 2027-ம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2029-ம் ஆண்டும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ராஜமவுலி கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய ராம் சரண், கொரோனா போன்ற எந்த தடைகளும் வரவில்லை என்றால், "எஸ்எஸ்எம்பி 29" ஒன்றரை ஆண்டுகளுக்குள் வெளியிடப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை' என்றார்.

ராம் சரணின் இந்த கணிப்புக்கு ராஜமவுலி ரியாக்சன் கொடுத்தார். அதன்படி அவர் கூறுகையில், 'நான் ராம் சரணுக்கு நல்ல பயிற்சி கொடுத்திருக்கிறேன் என்பதை இது வெளிகாட்டுகிறது' என்று வேடிக்கையாக கூறினார்.

மேலும் செய்திகள்