இந்தியன் 2: கதாபாத்திரம் குறித்து பகிர்ந்த ரகுல்பிரீத் சிங்
|இந்த கதாபாத்திரம் என் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது என்று ரகுல்பிரீத் சிங் கூறினார்.
சென்னை,
கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார் ரகுல்பிரீத் சிங். இந்த படம் திரைக்கு வர தயாராகிறது. இதில் நடித்தது குறித்து ரகுல்பிரீத் சிங் நெகிழ்ச்சியோடு கூறும்போது, "இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி சில ஆர்வமிக்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இது நிச்சயமாக எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் சிறப்புவாய்ந்த முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். இதில் நான் நடித்த கதாபாத்திரம் இதுவரை செய்த கதாபாத்திரங்களை விட வித்தியாசமாக இருக்கும்.
இந்த படத்தில் நான் தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக நடித்திருக்கிறேன். தான் நினைத்ததை எப்படி சாதிக்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்த கதாபாத்திரம். இந்த படத்துக்காக பயணம் செய்த நாட்கள் மற்றும் இந்த கதாபாத்திரம் என் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது என்ற எண்ணம் உள்ளது. இன்னும் நிறைய விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது. ஆனால் இப்போது சொல்ல முடியாது. சொல்லக்கூடாது'' என்றார்.