கேதார்நாத், பத்ரிநாத்தில் ரஜினிகாந்த் வழிபாடு
|இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த், பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புனித தலங்களில் வழிபாடு செய்து இருக்கிறார்.
கேதார்நாத்,
ஒவ்வொரு வருடமும்தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கொரோனா பரவல் காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோகள் இணையத்தில் வைரலாயின.
தற்போது, வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் உத்தராகண்ட்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களில் வழிபாடு செய்து இருக்கிறார். இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அடுத்த மாதம் 3 அல்லது 4-ம் தேதி அவர் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இமயமலையில் மக்களோடு மக்களாக ரஜினிகாந்த் இருக்கும் வீடியோ வெளியாகி இருந்தது.