< Back
சினிமா செய்திகள்
Rajinikanth reveals Siva wrote Kanguva for him
சினிமா செய்திகள்

'கங்குவா' எனக்காக உருவாக்கப்பட்ட கதை' - நடிகர் ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
27 Oct 2024 11:26 AM IST

'கங்குவா' கதையை இயக்குனர் சிவா தனக்காக எழுதியதாக ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு 'கங்குவா' கதை குறித்து பேசினார். அதில் அவர் பேசுகையில்,

'அண்ணாத்த படப்பிடிப்பின்போது "நான் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்க விரும்புகிறேன், எனக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள்" என இயக்குனர் சிவாவிடம் கூறினேன். அதற்கு அவர் 'செய்கிறேன்' என்று சொன்னார். ''கங்குவா' எனக்காக உருவாக்கப்பட்ட கதை. அதைதான் இப்போது சூர்யாவிற்கு ஏற்றார்போல் சிவா மாற்றிவிட்டார் என நினைக்கிறேன். நிச்சயமாக சிவா எனக்காக இன்னொரு படம் பண்ணுவார்' என்றார்.

மேலும் செய்திகள்