< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த்
|15 July 2024 7:23 AM IST
அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
சென்னை,
மும்பையில் நடைபெற்ற அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பி வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்பானி வீட்டின் கடைசி கல்யாணம் மிக பிரமாண்டமாக நடந்தது. அதில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கமல் நடித்துள்ள 'இந்தியன்-2' திரைப்படத்தை நாளை (இன்று) பார்க்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தமிழகத்தில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்தும், சட்டம்-ஒழுங்கு குறித்தும் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேட்டபோது, 'நோ கமென்ட்ஸ்' என கூறிவிட்டு சென்றார்.