பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் - புகைப்படங்கள் வைரல்
|வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார்.
கேதார்நாத்,
ஒவ்வொரு வருடமும், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோகள் இணையத்தில் வைரலாயின.
தற்போது, வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களில் வழிபாடு செய்தார். இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், அங்குள்ள பாபாஜி குகைக்கு தற்போது ரஜினிகாந்த் சென்றுள்ளார். கரடு முரடாண பாதையில் நடந்து சென்று பாபாஜி குகையில் தியானம் செய்து இருக்கிறார். இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதனைத்தொடர்ந்து, அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.