< Back
சினிமா செய்திகள்
Rajinikanth greets fans as he reaches delhi airport after spiritual trip to Himalayas
சினிமா செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
5 Jun 2024 5:26 PM IST

ஒரு வார பயணமாக இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார்.

சென்னை,

வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் ரஜினிகாந்த் ஒரு வார பயணமாக இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டார். ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து ரஜினிகாந்த், பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார்.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

'நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கும், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடிக்கும் வாழ்த்துகள்'. இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார். மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றாரா ரஜினிகாந்த்? என்று இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்