< Back
சினிமா செய்திகள்
சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்த பாலையாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
சினிமா செய்திகள்

சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்த பாலையாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

தினத்தந்தி
|
1 Sept 2024 1:21 PM IST

பாலையா தெலுங்கு திரையுலகில் இதுவரை 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் பாலையா. நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என மாஸ் காட்டி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 60 வயதை கடந்தாலும் ஆக்சனில் இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் பாலையா நடித்துவருகிறார்.

தெலுங்கு திரையுலகில் இதுவரை 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் இன்றுடன் சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார். சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்த பாலையாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "ஆக்சன் கிங்! கலெக்சன் கிங்! டயலாக் டெலிவரி கிங்! என்னுடைய அன்பு சகோதரர் பாலையா சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்