சினிமா செய்திகள்
தனுஷின் பாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?
சினிமா செய்திகள்

தனுஷின் பாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?

தினத்தந்தி
|
10 Jan 2025 1:16 PM IST

ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா' என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் தனுஷ் அறிமுகமானார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹாலிவுட், பாலிவுட் படத்திலும் நடித்துவருகிறார்.

அந்தவகையில், ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா' என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் தனுஷ் அறிமுகமானார். பின்னர் அவரது இயக்கத்திலேயே 'அட்ரங்கி ரே' என்ற படத்தில் நடித்தார். தற்போது, மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். 'தேரே இஸ்க் மேன்' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கலர் எல்லோ புரொடக்சன் தயாரிக்கிறது.

இந்த படத்தில் இந்தி நடிகை கிருத்தி சனோன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.


மேலும் செய்திகள்