< Back
சினிமா செய்திகள்
Raghava Lawrence denies Mrunal Thakur’s casting in Kanchana 4
சினிமா செய்திகள்

'காஞ்சனா 4'-ல் மிருணாள் தாகூர் ? - ராகவா லாரன்சின் பதிவு வைரல்

தினத்தந்தி
|
9 Jun 2024 3:57 PM IST

'காஞ்சனா 4' படத்தில் மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.

சென்னை,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் பேமிலி ஆடியன்சை கவர்ந்தன.

தற்போது, 'காஞ்சனா 4' படத்தை இயக்குவதில் ராகவா லாரன்ஸ் கவனம் செலுத்தி வருகிறார். செப்டம்பர் மாதம் 'காஞ்சனா 4' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இப்படத்தில், மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. இதற்கு ராகவா லாரன்ஸ் மறுப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

'நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம், காஞ்சனா 4 படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்,' இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்