< Back
சினிமா செய்திகள்
Pushpa1 is an introduction...Pushpa 2 will show who the real Bhagat Basil is - Nazriya
சினிமா செய்திகள்

'புஷ்பா 1 அறிமுகம்தான்...உண்மையான பகத் பாசில் யார் என்பது புஷ்பா 2-ல் தெரியும்' - நஸ்ரியா

தினத்தந்தி
|
18 Nov 2024 7:35 AM IST

புஷ்பா 2 படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.

சென்னை,

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில், புஷ்பா 2 படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பகத்பாசிலின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா 'உண்மையான பகத் பாசில் யார் என்பது புஷ்பா 2-ல் தெரியும்' என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

'ஒரு ரசிகையாக, அவர் நடிக்கும் திரைப்படங்களில் தனது ஒவ்வொரு நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்க்கிறார் என்பதை நம்புகிறேன். அதேபோல், 'புஷ்பா 2'-ல் அவரது உண்மையான நடிப்புத் திறமை முழுவதுமாக வெளிப்படும்.

'புஷ்பா 2' முழு பகத் பாசில் ஷோவாக இருக்கும். புஷ்பா 1 அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதுபோல் இருந்தது. உண்மையான பகத் பாசில் யார் என்பதை இரண்டாம் பாகம் காண்பிக்கும்' என்றார்.


மேலும் செய்திகள்