< Back
சினிமா செய்திகள்
‘Pushpa Pushpa’ video song out
சினிமா செய்திகள்

வெளியானது 'புஷ்பா புஷ்பா' வீடியோ பாடல்

தினத்தந்தி
|
18 Dec 2024 9:29 PM IST

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது.

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற 'புஷ்பா புஷ்பா' பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வரை இப்படம் ரூ.1,409 கோடி வரை வசூல் செய்துள்ளநிலையில், விரைவில் ரூ.1,500 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்