< Back
சினிமா செய்திகள்
Pushpa director to produce Naga Chaitanyas 24th film
சினிமா செய்திகள்

நாக சைதன்யாவின் 24-வது படத்தை தயாரிக்கும் 'புஷ்பா' பட இயக்குனர்

தினத்தந்தி
|
24 Nov 2024 6:01 PM IST

நாக சைதன்யவின் 24-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. இவர் கடந்த 2009ம் ஆண்டு வெளியான 'ஜோஷ்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மனம், ஆட்டோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'கஸ்டடி'. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். இப்படத்தில், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இதனையடுத்து நாக சைதன்யா, 'தண்டேல்' படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இயக்குகிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், நாக சைதன்யவின் 24-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தற்காலிகமாக என்.சி 24 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் தண்டு இயக்க உள்ளார்.

இவர் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'விருபாக்சா' படத்தை இயக்கி அறிமுகமாகி இருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் புஷ்பா பட இயக்குனரின் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிகின்றது.

மேலும் செய்திகள்