< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2 டிரெய்லர் : 12 கோடி பார்வைகளை கடந்து சாதனை
சினிமா செய்திகள்

புஷ்பா 2 டிரெய்லர் : 12 கோடி பார்வைகளை கடந்து சாதனை

தினத்தந்தி
|
19 Nov 2024 5:49 PM IST

புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா 'கிஸ்சிக்' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதனையடுத்து வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று முன்தினம் வெளியான டிரெய்லர் யூடியூப் தளத்தில் தற்போது வரை 12 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 10.2 கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதாவது இந்தியாவில் 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற 3-வது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 11.3 கோடி பார்வைகளுடன் 'சலார்' திரைப்பட டிரெய்லர் முதல் இடத்திலும், 10.6 கோடி பார்வைகளுடன் 'கே.ஜி.எப். 2' டிரெய்லர் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மேலும் செய்திகள்