'புஷ்பா 2' என் மனதை தொட்டுவிட்டது - இயக்குனர் அட்லீ
|சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 'புஷ்பா 2' படம் இன்று பான் இந்தியா அளவில் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இந்த படம் பான் இந்தியா அளவில் பலத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் 'புஷ்பா 2' இன்று வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்த இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் அட்லீ தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது, ''புஷ்பா: தி ரூல்' படம் உண்மையிலே என் மனதை தொட்டுவிட்டது. அல்லு அர்ஜூன் சார், உங்களுடைய நடிப்பு சூப்பராக உள்ளது. மற்றொரு பிளாக்பஸ்டருக்காக வாழ்த்துக்கள் சார். சுகுமார் சகோதரருக்கும் வாழ்த்துகள். என்னவொரு கடினமான உழைப்பு, மிகவும் பிடித்திருந்தது. பகத் பாசிலும், ராஷ்மிகா மந்தனாவும் சிறப்பாக நடித்து இருந்தனர். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்" இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அட்லீ.