< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2: கிஸ்ஸிக் பாடல் வெளியாகும்நிலையில் வாரணாசியில் சாமி தரிசனம் செய்த ஸ்ரீலீலா
சினிமா செய்திகள்

'புஷ்பா 2': 'கிஸ்ஸிக்' பாடல் வெளியாகும்நிலையில் வாரணாசியில் சாமி தரிசனம் செய்த ஸ்ரீலீலா

தினத்தந்தி
|
23 Nov 2024 9:12 AM IST

ஸ்ரீலீலா நடனமாடியுள்ள 'கிஸ்ஸிக்' பாடல் நாளை வெளியாக உள்ளது.

சென்னை,

மகேஷ் பாபு, ஸ்ரீலீலா நடிப்பில் முன்னதாக வெளியான படம் 'குண்டூர் காரம்'. இப்படத்தில் இடம்பெற்ற 'குர்ச்சி மடத்தப்பெட்டி' பாடலின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற ஸ்ரீலீலா, தற்போது, அல்லு அர்ஜுனுடன் இணைந்து 'புஷ்பா 2' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இப்படத்தின் முதல் பாகத்தில் 'ஊ சொல்ரியா' என்ற சிறப்பு பாடலுக்கு சமந்தா நடினமாடியநிலையில், தற்போது ஸ்ரீலீலா நடனமாடி இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கிஸ்ஸிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா வாரணாசியில் சாமி தரசினம் செய்துள்ளார். தனது தாயுடன் நடிகை ஸ்ரீலீலா அங்கு சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2: தி ரூல்' படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்