< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2 : ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பதிவு வைரல்
சினிமா செய்திகள்

புஷ்பா 2 : ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பதிவு வைரல்

தினத்தந்தி
|
5 Dec 2024 3:25 PM IST

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'புஷ்பா 2 ' இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மைம் கோபி, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

மேலும் இப்படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புஷ்பா 2' படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்