< Back
சினிமா செய்திகள்
வசூல் வேட்டையில் புஷ்பா 2 படம்...10 நாட்களில் இவ்வளவு வசூலா?
சினிமா செய்திகள்

வசூல் வேட்டையில் புஷ்பா 2 படம்...10 நாட்களில் இவ்வளவு வசூலா?

தினத்தந்தி
|
15 Dec 2024 11:11 AM IST

இந்திய அளவில் அதிவேகமாக ரூ.1000 கோடி வசூல் செய்த பெருமை புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளது.

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூலை கடந்தது. இந்திய அளவில் அதிவேகமாக இந்த சாதனையை எட்டியுள்ள படம் என்ற பெருமையும் புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடிவரும் நிலையில், கடந்த 10-நாட்களில் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் ரூ.1190 வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் வசூல் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்