< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2 : கிஸ்ஸிக் பாடல் புதிய சாதனை
சினிமா செய்திகள்

புஷ்பா 2 : 'கிஸ்ஸிக்' பாடல் புதிய சாதனை

தினத்தந்தி
|
27 Nov 2024 6:49 AM IST

புஷ்பா 2 படத்தின் 'கிஸ்ஸிக்' லிரிக் பாடல் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசரும், டிரெய்லரும் அதனைத் தொடர்ந்து படத்தின் லிரிக் பாடல்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீ லீலா நடனமாடியுள்ள இந்த பாடலுக்கு 'கிஸ்ஸிக்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பாடல் கடந்த 24-ந் தேதி வெளியானது. கிஸ்ஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்த லிரிக் பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது வெளியான 24 மணி நேரத்தில் 4.2 கோடி பார்வைகளை கடந்து, இதுவரை எந்த லிரிக் பாடலும் பெறாத அளவிற்கு பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். பாடலை சுப்லாஷினி பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது வரை 5 கோடிக்கும் அதிகமாக பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்