'புஷ்பா 2': தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்த நடிகர் தாரக் பொன்னப்பா
|'புஷ்பா 2' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
சென்னை,
புஷ்பா படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள படம் புஷ்பா2: தி ரூல். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இதில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத்பாசில் ஆகியோர் கவனம் ஈர்த்தனர்.
அதே சமயம், பாதி மொட்டையடித்த தலையுடன் இடம்பெற்றிருந்த ஒரு புதிய கதாபாத்திரமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், பிரசாந்த் நீலின் கேஜிஎப் 1, 2, சமீபத்தில் வெளியான தேவரா படங்களில் நடித்திருந்த கன்னட நடிகர் தாரக் பொன்னப்பா.
இந்நிலையில், 'புஷ்பா 2' படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி தாரக் பொன்னப்பா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'புஷ்பா-2 படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் புஷ்பாவின் வாழ்வில் ஒரு திருப்பத்தை கொடுத்திருக்கிறது' என்றார். புஷ்பா 2: தி ரூல் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.