'பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது முக்கியம்' - நடிகர் பிருத்விராஜ்
|நடிகர்கள் ராஜினாமா செய்வது குறித்து நடிகர் பிருத்விராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
திருவனந்தபுரம்,
கேரளாவில் மலையாள பட நடிகர்கள் மீது நடிகைகள் பலர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றனர். பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர். இந்நிலையில், கேரள திரைத்துறையில் நடிகர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது குறித்து நடிகர் பிருத்விராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
'ஹேமா கமிட்டியின் அறிக்கை கண்டறிந்துள்ள விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது முக்கியம். அதிகாரத்தில் இருப்பவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டால், பதவியில் இருந்து விலக வேண்டும்.
செல்வாக்கு மிக்க குழு என்று அழைக்கப்படுவோரிடம் இருந்து நான் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை என்பதால் அப்படியொரு பிரச்சினையே நடக்கவில்லை என்று அர்த்தமல்ல', என்றார்