கங்குவா படத்தின் 'யோலோ' பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு
|கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'யோலோ' பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்த பாடலின் புரோமோ வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.