'மெதக்குது காலு ரெண்டும்' பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு
|'பிரதர்' படம் அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் 'பிரதர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'பிரதர்' படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'மெதக்குது காலு ரெண்டும்' என்ற பாடல் நாளை (அக்டோபர் 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.