'பிளடி பெக்கர்' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
|கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் 'பிளடி பெக்கர்' படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த படத்துக்கு தணிக்கை குழு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. 'பிளடி பெக்கர்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாகும். சமீபத்தில் இப்படத்தின் 3-வது பாடலான 'பொன்மயமே' என்ற பாடல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கவின் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.