< Back
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
சினிமா செய்திகள்

'குட் பேட் அக்லி' படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

தினத்தந்தி
|
25 Nov 2024 10:46 AM IST

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. பல்கேரியாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் ஒரு சில காரணங்களால் இசையமைப்பாளரை மாற்றும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதாவது தேவிஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக அனிருத் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர், இப்படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இப்படத்திற்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பணிகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். தேதியை விரைவில் அறிவிப்போம். தமிழில் எங்களது முதல் படம் இதுவாகும், எனவே பிளாக்பஸ்டராக இருக்கும் என நம்புகிறோம்" என தயாரிப்பாளர் நவீன் எர்னேனி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்