< Back
சினிமா செய்திகள்
Producer announces Allu Arjuns next film
சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்

தினத்தந்தி
|
30 Dec 2024 7:26 AM IST

அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் புஷ்பா 2 . அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடித்திருந்த இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனைபடைத்து வருகிறது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 1,705 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.

இப்படத்தையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் சூரிய தேவர நாக வம்சி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'திரி விக்ரம் சார் இதற்கு முன்பு யாரும் செய்யாத ஒன்றை அல்லு அர்ஜுனை வைத்து செய்யப்போகிறார். ராஜமவுலி சார் கூட இதுவரை இதனை செய்ததில்லை. இந்த படம் நல்லபடியாக வந்தால், இந்தியத் திரைகளில் இதுவரை பார்க்காத விஷயத்தை பார்வையாளர்கள் பார்ப்பார்கள்' என்றார்.

ஏற்கனவே அல்லு அர்ஜுன், திரி விக்ரம் கூட்டணியில் வந்த ஜுலாயி, சன் ஆப் சத்யமூர்த்தி, வைகுண்டபுரம் படங்கள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்