< Back
சினிமா செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரியா ஆனந்த்
சினிமா செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரியா ஆனந்த்

தினத்தந்தி
|
29 Jun 2024 11:38 AM IST

நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

திருச்செந்தூர்,

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா ஆனந்த். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'வாமனன்' படத்தின் மூலம் தமிழிலும், 2010-ம் ஆண்டு வெளியான 'லீடர்' படத்தின் மூலம் தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும், இவர் பாலிவுட் திரைப்படமான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தும் பிரபலமானவர். இந்நிலையில், நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது, இவர் 'அந்தகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

'அந்தகன்' படமானது நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்த நிலையில் தற்போது படம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்தான் 'அந்தகன்' என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்