ஓடிடியில் வெளியாகும் 'ஆடு ஜீவிதம்'
|நடிகர் பிருத்விராஜின் 'ஆடு ஜீவிதம்' படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கிய இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்தார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியானது.
'ஆடு ஜீவிதம்' திரைப்படம் முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பெற்ற மலையாளப் படத்தில் ஒன்றாக அமைந்தது. இப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டியது. தற்போதுவரை இப்படம் ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.