< Back
சினிமா செய்திகள்
Premalu star in Pushpa 2 makers’ next Tamil film
சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் மமிதா பைஜு?

தினத்தந்தி
|
17 Jan 2025 8:34 AM IST

மமிதா பைஜு தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'ரெபல்' படத்தில் நடித்து அறிமுகமானார்.

சென்னை,

மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொத்தாக அள்ளிய இளம் நடிகை மமிதா பைஜு. அப்படத்தை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அதன்படி, மமிதா பைஜு தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'ரெபல்' படத்தில் நடித்து அறிமுகமானார். தற்போது விஜய்யின் 'தளபதி 69' படத்திலும் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக இருந்த கீர்த்தீஸ்வரன் இப்படத்தை இயக்க இருப்பதாகவும் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்