< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
மீண்டும் இணைந்த 'பிரேமலு' நடிகைகள் - வைரலாகும் புகைப்படம்

29 Jan 2025 8:03 AM IST
நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த ’சூக்சம தர்ஷினி’ படத்தில் கடைசியாக அகிலா நடித்திருந்தார்.
சென்னை,
கடந்த ஆண்டு மிகப்பெரிய லாபம் ஈட்டிய படங்களில் ஒன்று பிரேமலு. கிரிஷ் ஏ.டி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மமிதா பைஜுவின் தோழியாக அகிலா நடித்திருந்தார்.
இந்நிலையில், மமிதாவும் , அகிலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகிலா பகிர்ந்துள்ளார். அதனுடன், மீண்டும் சந்தித்தோம் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மமிதா பைஜு தற்போது விஜய்யுடன் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம், நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த 'சூக்சமதர்ஷினி' படத்தில் கடைசியாக அகிலா நடித்திருந்தார். இப்படத்தையடுத்து, 'சுமதி வளவு' என்ற படத்தில் நடிக்கிறார்.