அஜித் படத்தில் இணையும் 'பிரேமலு' நடிகர்? - வெளியான தகவல்
|'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க பிரேமலு நடிகர் நஸ்லேனுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இய்க்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.
தற்போது, 'குட் பேட் அக்லி'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க பிரேமலு நடிகர் நஸ்லேனுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையானால் இவர் தமிழில் நடிக்கும் முதல் படமாக 'குட் பேட் அக்லி' அமையும்.
கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் 'பிரேமலு'. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.