< Back
சினிமா செய்திகள்
அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்

தினத்தந்தி
|
5 Dec 2024 4:53 PM IST

பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்ஐகே) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து 'ஓ மை கடவுளே' என்ற படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே மூன்றாவதாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் சுதாகொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு திரைப்பட பிரபலம் மமிதா பைஜு நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்