< Back
சினிமா செய்திகள்
ராமாயணம் படத்தில் பரசுராமராக நடிக்கும் பிரபாஸ்
சினிமா செய்திகள்

'ராமாயணம்' படத்தில் பரசுராமராக நடிக்கும் பிரபாஸ்

தினத்தந்தி
|
30 Sept 2024 1:04 PM IST

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார்.

சென்னை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இப்படம் சுமார் ரூ.835 கோடி என்ற மெகா பட்ஜெட்டில் உருவாவதாகவும், 2027-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது 'ஆதிபுருஷ்' படத்தில் ராமராக நடித்த பிரபாஸ், நிதிஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படத்தில் பரசுராமராக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராம அவதாரத்துக்கு முந்தைய பரசுராம அவதாரம், இந்த படத்தில் முக்கிய காட்சிகளாக இடம்பெறுவதால் ராமர் கதாபாத்திரத்துக்கு இணையாக அது இருக்க வேண்டும் என்று கருதி பிரபாஸை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். பிரபாஸுக்கும் இந்த கதாபாத்திரம் பிடித்து இருப்பதால் நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்