< Back
சினிமா செய்திகள்
அவதூறு பரப்பியவர் மீது வழக்கு தொடர்ந்த பிரபல மலையாள நடிகை
சினிமா செய்திகள்

அவதூறு பரப்பியவர் மீது வழக்கு தொடர்ந்த பிரபல மலையாள நடிகை

தினத்தந்தி
|
8 Jan 2025 8:46 PM IST

பிரபல மலையாள நடிகை மாலா பார்வதி தன்னை பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

திருவனந்தபுரம்,

மலையாள குணசித்ர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாரா, எப்ஐஆர், அன்னபூரணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை மாலா பார்வதி தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படும் நபர் மீதும், தான் நடித்த படங்களில் இருந்து தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி வீடியோவை உருவாக்கிய யூடியூப் சேனல் மீதும் போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் அந்த யூடியூப் சேனலிடம் இருந்து விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, திருவனந்தபுரத்தில் உள்ள சைபர் காவல் நிலையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்