< Back
சினிமா செய்திகள்
Popular Kannada director to debut in Bollywood
சினிமா செய்திகள்

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல கன்னட இயக்குனர்

தினத்தந்தி
|
3 Jan 2025 7:59 AM IST

இயக்குனர் பிரேம் தற்போது கேடி- தி டெவில் படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை,

பிரபல கன்னட இயக்குனர் பிரேம். கடந்த 1993-ம் ஆண்டு வெளியான நிஸ்கர்ஷா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து சினிமாவுக்குள் நிழைந்த இவர், கடந்த 2003-ம் ஆண்டு கரியா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தர்ஷன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது கேடி- தி டெவில் படத்தை இயக்கி வருகிறார். இதில், துருவா சர்ஜா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபகாலமாக இவர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், அதனை இயக்குனர் பிரேம் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"ஆமாம், நான் இந்தியில் ஒரு படம் இயக்கப் போகிறேன் என்ற செய்தி உண்மைதான். கடந்த ஆண்டே பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க இருந்தேன் ஆனால், அது ஒரு படத்தின் ரீமேக். நான் ரீமேக்கை எடுக்க விரும்பவில்லை. தற்போது புதிய படம் ஒன்று உள்ளது. விரைவில் அதனை அனைவருக்கும் அறிவிப்பேன்' என்றார்.

மேலும் செய்திகள்