< Back
சினிமா செய்திகள்
Popular actress who spoke openly about her desire to act in Pa. Ranjith

image courtecy:instagram@preity_mukhundhan

சினிமா செய்திகள்

'இவர் படத்தில் நடிக்க விருப்பம்' - ஓப்பனாக பேசிய ஸ்டார் பட நடிகை

தினத்தந்தி
|
7 Aug 2024 6:41 PM IST

பா.ரஞ்சித் படத்தில் நடிக்க விரும்புவதாக ஸ்டார் பட நடிகை கூறினார்.

சென்னை,

இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே மாதம் 10-ம் தேதி வெளியான படம் ஸ்டார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் லால், கீதா கைலாசம், பிரீத்தி முகுந்தன், அதிதி போஹங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், வசூல் ரீதியாக வெற்றியை கண்டது. தற்போது 'ஸ்டார்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை பிரீத்தி முகுந்தன் செய்தியாளர்கள் சந்திப்பில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அப்போது அவர் கூறுகையில்,

'தமிழில் ஒன்று, இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது அதை பற்றி என்னால் எதுவும் பேச முடியாது. விரைவில் அது குறித்து தெரிவிப்பேன். பா.ரஞ்சித் சார் படத்தில் நடிக்க விருப்பம், என்றார்

மேலும் செய்திகள்