< Back
சினிமா செய்திகள்
தனுஷின் 55-வது படத்தில் இணையும் பிரபல நடிகை
சினிமா செய்திகள்

தனுஷின் 55-வது படத்தில் இணையும் பிரபல நடிகை

தினத்தந்தி
|
24 Dec 2024 5:25 PM IST

தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் 'குபேரா' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம், இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தை `கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தனுஷுடன் இணைந்து '3' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்