< Back
சினிமா செய்திகள்
Image Courtesy: Instagram@teddysphotos
சினிமா செய்திகள்

மீண்டும் இந்தியா வரும் இங்கிலாந்து பாப் பாடகர் எட் ஷீரன் - சென்னை உள்பட 6 இடங்களில் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
29 Nov 2024 1:38 PM IST

பாப் பாடகர் எட் ஷீரன், கடந்த மார்ச் மாதம் மும்பையில் நிகழ்ச்சி நடத்தினார்.

வாஷிங்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாப் பாடகர் எட் ஷீரன். இவருடைய முதல் ஆல்பமான 'பிளஸ்' மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான, ஷேப் ஆப் யூ, திங்கிங் அவுட் லவுட், பெர்பெக்ட், ஷிவர்ஸ் போன்றவை இவரை உலக அளவில் பிரபலமாக்கியது.

இவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் மும்பையில் நடத்தினார். இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து, எட் ஷீரன் மீண்டும் எப்போது இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், எட் ஷீரன் அடுத்த ஆண்டு சென்னை உள்பட 6 இடங்களில் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான பொது டிக்கெட் விற்பனை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குகிறது.

எட் ஷீரன் நிகழ்ச்சி நடத்தும் தேதிகள் மற்றும் இடங்கள்:

ஜனவரி 30: புனே, யாஷ் லான்ஸ்

பிப்ரவரி 2: ஐதராபாத், ராமோஜி பிலிம் சிட்டி

பிப்ரவரி 5: சென்னை, ஒய்எம்சிஏ மைதானம்

பிப்ரவரி 8: பெங்களூரு, நைஸ் மைதானம்

பிப்ரவரி 12: ஷில்லாங், ஜேஎன் ஸ்டேடியம்

பிப்ரவரி 15: டெல்லி என்சிஆர், லெஷர் வேலி மைதானம்

மேலும் செய்திகள்