< Back
சினிமா செய்திகள்
Pooja Hegdes Deva teaser released
சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டேவின் 'தேவா' பட டீசர் வெளியானது

தினத்தந்தி
|
6 Jan 2025 9:22 AM IST

வரும் 31-ம் தேதி ’தேவா’ படம் வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ள இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இதில், தேவா படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனையடுத்து, தேவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 31-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டு வெளியாகும் பூஜா ஹெக்டேவின் முதல் படமாக இது அமைந்துள்ளது. மறுபுறம் பூஜா ஹெக்டே நடிக்கும் மற்ற படங்களான 'தளபதி 69' வரும் அக்டோபர் மாதமும், 'ரெட்ரோ' கோடை விடுமுறையிலும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'தேவா' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்