< Back
சினிமா செய்திகள்
பூஜா ஹெக்டே நடிக்கும் தேவா படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டே நடிக்கும் 'தேவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தினத்தந்தி
|
11 July 2024 5:03 PM IST

நடிகை பூஜா ஹெக்டே நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படமான 'தேவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. கடந்த வருடம் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால் சினிமாவில் இருந்து சிறிது விலகி இருந்தார்.

தற்போது ஆக்ஷன் திரில்லர் படமான 'தேவா' படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தினை 'சல்யூட்' மற்றும் 'காயம்குளம் கொச்சுன்னி' போன்ற மலையாள பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த ரோஷன் ஆண்ட்ரூஸ் "தேவா" இயக்கியுள்ளார். இப்படத்தை சித்தார்த் ராய் கபூரின் ராய் கபூர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதை தவிர பூஜா ஹெக்டே, நடிகர் சூர்யாவின் 44-வது படத்திலும், நதியத்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் "சங்கி" படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்