< Back
சினிமா செய்திகள்
தயவு செய்து கதை எழுதாதே!.. ஆசிரியர் சொன்னதை தொழிலாகவே மாற்றிய பிரதீப் ரங்கநாதன்
சினிமா செய்திகள்

தயவு செய்து கதை எழுதாதே!.. ஆசிரியர் சொன்னதை தொழிலாகவே மாற்றிய பிரதீப் ரங்கநாதன்

தினத்தந்தி
|
19 Feb 2025 10:03 AM IST

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்திலும் நடித்துள்ளார். இதில் டிராகன் படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனக்கு கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, 2012-ம் ஆண்டு பிரதீப் பி.டெக் படிக்கும் போது தேர்வில் கதை எழுதி வைத்துள்ளார். தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியர் "மை டியரஸ்ட் பிரதீப்.. தயவு செய்து கதை எழுதாதே" என அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த தேர்வுத்தாளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன், "அன்று என் ஆசிரியர் என்னை கதை எழுத வேண்டாம் என கூறினார். ஆனால் இப்போது அதையே என் தொழிலாக மாற்றிக்கொண்டேன்" என குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்