< Back
சினிமா செய்திகள்
கங்குவா படத்திற்கு கூடுதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி - தமிழக அரசு
சினிமா செய்திகள்

கங்குவா படத்திற்கு கூடுதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி - தமிழக அரசு

தினத்தந்தி
|
12 Nov 2024 12:40 PM IST

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இப்படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குளில் வெளியாகிறது. மேலும் இப்படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் கூடுதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது சூர்யாவின் கங்குவா படத்தை திரையிட கூடுதல் சிறப்பு காட்சிக்கு தமிழ் நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதாவது நவ.14-ந் தேதி மட்டுமே காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரைப்படும்.

மேலும் செய்திகள்