< Back
சினிமா செய்திகள்
பார்க்கிங் பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்
சினிமா செய்திகள்

'பார்க்கிங்' பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்

தினத்தந்தி
|
22 Oct 2024 7:53 PM IST

சிவகார்த்திகேயன் பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்திருந்தனர். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். ஈகோ தொடர்பான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றுள்ள இந்த படம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷணனிடம் கதையை கேட்டிருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை சந்தித்து தனது அடுத்த படத்தின் முழு கதையையும் சொல்லி இருப்பதாகவும் அதற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்லி விட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சிவகார்த்திகேயன் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் புதிய படம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் அமரன், எஸ்கே 23 ஆகிய படங்களுக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்